Oct 10, 2026
Thisaigal NewsYouTube

முன்னாள் இயக்குநர் மீது ஊழல் குற்றச்சாட்டு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
முன்னாள் இயக்குநர் மீது ஊழல் குற்றச்சாட்டு

மலாக்கா, ஜூன்.17-

மலாக்கா மாநில இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை முன்னாள் இயக்குநர் ஒருவர் ஒரு லட்சத்து 26 ஆயிரம் ரிங்கிட்டை லஞ்சமாகப் பெற்றதாக இன்று மலாக்கா, ஆயர் குரோ செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.

51 வயது கைரோல் அட்ட் ரொஸ்லி என்ற அந்த முன்னாள் இயக்குநர், நீதிபதி எலிசாபெட் பாயா வான் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதி மலாக்கா மாநில இளைஞர், விளையாட்டுத்துறை அலுவலகத்தில் அவர் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →