சிறார்கள் சம்பந்தப்பட்ட ஆபாசப்படங்களை வைத்திருந்த குற்றத்திற்காக சீன பாரம்பரிய மருந்துக்கடை பணியாளர் ஒருவருக்கு தெலுக் இந்தன் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 6 மாத சிறைத் தண்டனையும் 2 ஆயிரத்து 500 வெள்ளி அபராதமும் விதித்தது.
24 வயது லியு மிங் ஹுய் என்ற அந்த ஆடவர், மாஜிஸ்திரேட் தி. அஷ்வினி முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
அந்த மருந்துக்கடை பணியாளர், வீடியோ மற்றும் புகைப்படம் வடிவில் சிறார்கள் சம்பந்தப்பட்ட 19 ஆயிரத்து 11 ஆபாசப்படங்களை தமது பென் திராய்வ் வில் வைத்திருந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
அவர் இக்குற்றத்தை கடந்த மே 29 ஆம் தேதி மாலை 4.20 மணியளவில் தெலுக் இந்தான் அருகில் லங்காப் என்ற இடத்தில் புரிந்துள்ளார்.
குற்றவாளி என்று நிருபிக்கப்பட்டால் ஐந்து ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் 2017 ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் கீழ் அந்த நபர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.








