பிரதமர் பதவியிலிருந்து வீழ்த்துவதற்கு தமக்கு எதிராக விடுக்கப்பட்டு வரும் எந்தவொரு மிரட்டலுக்கும் அடிப்பணியப் போவதில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாக தெரிவித்தார்.
முன்பு அதிகாரத்தில் திளைத்து இருந்த செல்வ சீமான்கள் கும்பல் கும்பல்களாக தற்போது தமது தலைமையிலான அரசாங்கத்திற்கு தொடர்ந்து மிரட்டல்கள் விடுத்து வருவதாக பிரதமர் குறிப்பிட்டார்.
நாட்டை லஞ்சத்தின் பிடியிலிருந்து சுத்தம் செய்வதிலும், லஞ்ச ஊழலை துடைத்தொழிப்பதிலும் தாம் மேற்கொண்டு வரும் வேள்வி உறுதியானதாகும். எந்தவொரு அச்சுறுத்தலுக்கும், மிரட்டலுக்கும் தாம் ஒரு போதும் விட்டுக்கொடுக்கும் போக்கை கடைப்பிடிக்க முடியாது என்று பிரதமர் உறுதி தெரிவித்தார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


