கோலாலம்பூர், ஆகஸ்ட்.24-
வதந்திகளைப் பரப்பும் சமூக வலைத்தளப் பிரபலங்களுக்கு, தகவல் தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மன உந்துதல் இல்லாமல், உண்மையான, துல்லியமானத் தகவல்களை மட்டுமே பகிருமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
அண்மையில், உயிரிழந்த ஸாரா கைரினா விவகாரத்தில், போலி வல்லுநர்களால் பரப்பப்பட்டத் தவறானத் தகவல்களை அவர் சுட்டிக் காட்டினார். இது போன்ற செயல்கள், பார்வையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக, எவ்வித பின்விளைவுகளையும் யோசிக்காமல் மேற்கொள்ளப்படும் செயல்கள் என்று அவர் சாடினார். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.








