Jul 1, 2026
Thisaigal NewsYouTube
கிளந்தானில் 2 மாணவிகள் மீது கார் மோதி விபத்து - ஆசிரியருக்கு 2 நாட்கள் தடுப்பு காவல்
தற்போதைய செய்திகள்

கிளந்தானில் 2 மாணவிகள் மீது கார் மோதி விபத்து - ஆசிரியருக்கு 2 நாட்கள் தடுப்பு காவல்

Share:

கிளந்தானில் உள்ள ஒரு பள்ளி வளாகத்தில் நடந்த விபத்தில், படிவம் 1 மாணவி ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொரு மாணவி காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 57 வயதான ஆசிரியர் ஒருவர், கவனக்குறைவாக வாகனம் ஓட்டியது தொடர்பான விசாரணைக்காக இரண்டு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

கோத்தா பாருவில் உள்ள பள்ளி வளாகத்திற்குள் நேற்று காரை ஓட்டி சென்ற போது, இரண்டு மாணவர்களை அவர் மோதியதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் மாணவி ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News