Oct 16, 2026
Thisaigal NewsYouTube

கடப்பிதழ் மோசடியில் பின்னணியில் இருந்த இரண்டு பாகிஸ்தானியர்கள் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கடப்பிதழ் மோசடியில் பின்னணியில் இருந்த இரண்டு பாகிஸ்தானியர்கள் கைது

கோலாலம்பூர், நவ. 16-


அந்நிய நாட்டவர்களுக்கான கடப்பிதழ் மோசடி சம்பவம் தொடர்பில் ஒன்பது அந்நிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ள வேளையில் இந்த மோசடி நடவடிக்கைக்கு மூளையாக இருந்து செயல்பட்டவர்கள் என்று நம்பப்படும் இரண்டு பாகிஸ்தானிர்களும் வளைத்தப்பிடிக்கப்பட்டுள்ளனர்.

அண்மையில் கோலாலம்பூர் மாநகரில் மலேசிய குடிநுழைவத்துறை மேற்கொண்ட மூன்று மிகப்பெரிய சோதனை நடவடிக்கைகளில் கடப்பிதழை போலியாக்கும் இந்த ஆசாமிகள் பிடிபட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

காலவாதியாகின்ற மற்றவர்களுக்கு சொந்தமான கடப்பிதழ் விவரங்களை மற்றவர்களுக்கு மாற்றுவது, மலேசியாவில் வேலை செய்வதற்கு கோரப்படும் போமேமா சுகாதார சோதனையை விண்ணப்பத்தை அந்நிய நாட்டவர்களுக்கு அங்கீகரித்ததைத் போலி கடிதம் தயாரித்தல் முதலிய மோசடி வேலைகளில் அந்த இரண்டு பாகிஸ்தான் ஆடவர்கள் ஈடுபட்டு வந்தது அம்பலமாகியுள்ளது.

கோலாலம்பூரில் கடந்த ஆறு மாத காலமாக தீவிரமாக செயல்பட்டு வந்த அந்த இரண்டு பாகிஸ்தானியர்களும் கோலாலம்பூர் ஸ்தாபாக் பகுதியில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட மூன்று வேவ்வேறு சோதனை நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டுள்ளதாக மலேசிய குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் டத்தோ ஜக்காரியா ஷாபான் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →