Jan 22, 2026
Thisaigal NewsYouTube
கெடா மாநிலத்தில் பல பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும்
தற்போதைய செய்திகள்

கெடா மாநிலத்தில் பல பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும்

Share:

வரும் சனிக்கிழமை நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் கெடா மாநிலத்தை பக்காத்தான் ஹராப்பான் – பாரிசான் நேஷனல் கூட்டணி கைப்பற்றுமானால் மாநிலத்தில் பல பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும் என்று உள்துறை அமைச்சர் டத்தோ செரி சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

எந்தவொரு மாநில அரசாங்கமும் மத்திய அரசாங்கத்துடன் இணைந்து செயல் பட்டால் மட்டுமே தனது மாநிலத்தில் நிலவி வரும் பல பிரச்னைகளுக்கு சுமூகமான முறையில் தீர்வு காண முடியும்.

அந்த வகையில் கெடா மாநிலத்தை பக்காத்தான் ஹராப்பான் – பாரிசான் நேஷனல் கூட்டணி கைப்பற்றுவது மூலம் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் ஆட்சிபுரிந்து வரும் ஒற்றுமை அரசாங்கத்துடன் இணைந்து கெடா மாநிலத்தினால் நிறைவான ஆட்சியை வழங்க முடியும் என்ற பிகேஆர் கட்சியின் பொதுச் செயலாளருமான சைபுடின் குறிப்பிட்டார்.

கூலிம் சட்டமன்றத் தொகுதியில் பிகேஅர் சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக போட்டியிடும்
அவாங் தெங் லியாங் ஒங்குடன் நேற்று கூலிம் சுங்கை உலார் தோட்டத்திற்கு வருகை புரிந்த போது சைபுடின் இதனை தெரிவித்தார். சுங்கை உலார் தோட்டத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய நிர்வாகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற மக்களுடனான இந்த சந்திப்பு நிகழ்வில், பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் அவாங் தெங் லியாங் ஒங் கை ஆதரிக்க வேண்டிய அவசியத்தையும் சைபுடின் தெளிவுபடுத்தினார். அவாங் தெங் லியாங் ஒங்வெற்றி பெற்றால், கூலிம் தொகுதி, மத்திய அரசாங்கத்திடமிருந்து நிறைய உதவிகளை பெற முடியும் என்பதையும் அவர் விளக்கினார்.

Related News

மலேசியாவின் தொழிலாளர் சீர்திருத்தங்கள் துணிச்சலானவை: இந்தியத் தூதர் பாராட்டு

மலேசியாவின் தொழிலாளர் சீர்திருத்தங்கள் துணிச்சலானவை: இந்தியத் தூதர் பாராட்டு

தொழிலாளர்களின் ஆங்கிலமொழித் திறனை வலுப்படுத்த மனிதவள அமைச்சு 3 உத்திகளைச் செயல்படுத்துகிறது - டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்

தொழிலாளர்களின் ஆங்கிலமொழித் திறனை வலுப்படுத்த மனிதவள அமைச்சு 3 உத்திகளைச் செயல்படுத்துகிறது - டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்

கடந்த 3 ஆண்டுகளில் 47,250 கால்பந்து மைதானம் அளவிலான பவளப் பாறைகளை இழந்தது மலேசியா

கடந்த 3 ஆண்டுகளில் 47,250 கால்பந்து மைதானம் அளவிலான பவளப் பாறைகளை இழந்தது மலேசியா

நடமாடிய குதிரை மீது மோதிய மோட்டார் சைக்கிள்: பெண் தொழிலாளி காயம்

நடமாடிய குதிரை மீது மோதிய மோட்டார் சைக்கிள்: பெண் தொழிலாளி காயம்

மலேசியாவின் வட்டி விகிதம் 2.75 விழுக்காட்டில் நீடிப்பு: மத்திய வங்கி அறிவிப்பு

மலேசியாவின் வட்டி விகிதம் 2.75 விழுக்காட்டில் நீடிப்பு: மத்திய வங்கி அறிவிப்பு

சீனப் புத்தாண்டு: 150 கூடுதல் விமானங்கள் - ஒருவழிப் பயணக் கட்டணம் அதிகபட்சம் 600 ரிங்கிட்டாக நிர்ணயம்

சீனப் புத்தாண்டு: 150 கூடுதல் விமானங்கள் - ஒருவழிப் பயணக் கட்டணம் அதிகபட்சம் 600 ரிங்கிட்டாக நிர்ணயம்