Oct 2, 2026
Thisaigal NewsYouTube

போலீஸ் தடுப்புக் காவல் மரணம்: தனபாலன் குடும்பத்திற்கு 11 லட்சம் ரிங்கிட் இழப்பீடு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
போலீஸ் தடுப்புக் காவல் மரணம்: தனபாலன் குடும்பத்திற்கு 11 லட்சம் ரிங்கிட் இழப்பீடு

ஷா ஆலாம், டிசம்பர்.08-

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, போலீஸ் தடுப்புக் காவலில் மரணம் அடைந்த வர்த்தகர் எஸ். தனபாலன் குடும்பத்திற்கு 11 லட்சம் ரிங்கிட் இழப்பீடாக வழங்கும்படி அரசாங்கத்திற்கு ஷா ஆலாம் உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

வர்த்தகர் தனபாலனின் மனைவி வி. சாந்தி மற்றும் தனபாலனின் தந்தை P. வதியன் ஆகியோருக்கு ஆண்டுக்கு 5 விழுக்காடு வட்டியுடன் இந்த இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட வேண்டும் என்று நீதிபதி நோர் ஹயாத்தி மாட் உத்தரவிட்டார்.

தனபாலன் கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி ஷா ஆலாம் போலீஸ் தடுப்புக் காவலில் மரணம் அடைந்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →