கோத்தா கினபாலு, ஆகஸ்ட்.16-
தாமும் தமது கணவரும் போதைப்பொருள் நடவடிக்கையில் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதைச் சபாவைச் சேர்ந்த பெண் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் மறுத்துள்ளார்.
தம் மீதும், தமது கணவர் மீதும் சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டு அவதூறு என்றும் அடிப்படையற்றது என்றும் காகாசான் ரக்யாட் சபா கட்சியின் தலைவரான நொராஸ்லினா அரிஃப் தெரிவித்தார்.
தாமும், தமது கணவரும் போதைப்பொருளைப் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பான தகவலாகும் என்று குனாக் சட்டமன்ற உறுப்பினருமான நொராஸ்லினா அரிஃப் குறிப்பிட்டார்.
சபா சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அரசியலில் தமது பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்த இத்தகைய அவதூறு கட்டவிழ்க்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கினார்.








