Sep 26, 2026
Thisaigal NewsYouTube
புதிய எதிர்கட்சித் தலைவராக அகமட் சம்சூரி நியமனம்
தற்போதைய செய்திகள்

புதிய எதிர்கட்சித் தலைவராக அகமட் சம்சூரி நியமனம்

Share:

பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் அஹ்மத் சம்சூரி புதிய எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இம்முடிவானது இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற அக்கூட்டணியின் உச்சமன்றக் கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக அதன் பொதுச்செயலாளர் தகியுத்தீன் ஹசான் தெரிவித்துள்ளார்.

கெமாமான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான சம்சூரிக்கு, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிக் கூட்டணியை வழிநடத்தும் பொறுப்பை ஒப்படைப்பதை உச்சமன்றக் கூட்டத்தில் அனைவரும் ஏக மனதாக ஏற்றுக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், திரங்காணு மாநில மந்திரி பெசாருமான சம்சூரி, எதிர்க்கட்சியின் அரசியல் திட்டங்களை ஒருங்கிணைப்பதுடன், நாடாளுமன்ற விவாதங்கள் மற்றும் முக்கிய தேசிய கொள்கை விவாதங்களில் எதிர்க்கட்சிக் கூட்டணியை வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News