Oct 11, 2026
Thisaigal NewsYouTube

மகனைக் கத்தியால் குத்திய ஆசிரியருக்கு 7 நாள் தடுப்புக் காவல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மகனைக் கத்தியால் குத்திய ஆசிரியருக்கு 7 நாள் தடுப்புக் காவல்

கோத்தா பாரு, மே.03-

தனது 11 வயது மகனைக் காய்கறிகள் வெட்டும் கத்தியால் கத்தி, கடும் காயம் விளைவித்த ஆசிரியர் ஒருவரை 7 நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளனர்.

கிளந்தான், பாசீர் மாஸ், கம்போங் பங்கோல் சே டோல், போஹோன் தங்சோங்கில் நேற்று காலை 9 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 47 வயதுடைய ஆசிரியர், இன்று காலை 8.44 மணியளவில் கோத்தா பாரு, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, தடுப்புக் காவலுக்கான அனுமதியைப் போலீசார் பெற்றனர்.

தனது மகனைக் கொலை செய்ய முயற்சி செய்ததாக குற்றச்சாட்டின் பேரில் அந்த ஆசிரியர் தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →