ஷா ஆலாம், ஜூலை.29-
கடந்த வியாழக்கிழமை கிள்ளானில் துப்பாக்கி வேட்டைக் கிளப்பியது, வெற்று தோட்டா கண்டெக்கப்பட்டது தொடர்பில் இதில் தொடர்புள்ளவர்கள் என்று நம்பப்படும் சந்தேகப் பேர்வழிகளைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் அன்றைய தினம் இரவு 11.15 மணியளவில் போலீஸ் புகார் பெறப்பட்டுள்ளதாக தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் கமாலாரிஃபின் அமான் ஷா தெரிவித்தார்.
இதற்கானப் பின்னணிக் காரணங்கள் தொடர்ந்து புலன் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. எந்தவொரு சாத்தியத்தையும் அவர் நிராகரிக்கவில்லை.
இச்சம்பவம் 1960 ஆம் ஆண்டு ஆயுதச் சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக கமாலாரிஃபின் குறிப்பிட்டார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவர் துப்பாக்கி வேட்டைக் கிளப்பியது தொடர்பான காட்சி, ஒரு வீட்டின் முன்புறம் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருப்பதாக அவர் மேலும் கூறினார்.








