Dec 4, 2025
Thisaigal NewsYouTube
பத்து வெள்ளி கட்டணத்தில் வேலை தேடும் இளைஞர்களுக்கு தங்கும் வசதி
தற்போதைய செய்திகள்

பத்து வெள்ளி கட்டணத்தில் வேலை தேடும் இளைஞர்களுக்கு தங்கும் வசதி

Share:

நாட்டில் வேலை தேடி வரும் இளையோர்களுக்கு ஒரு நிரந்தர வேலை கிடைக்கும் வரையில் அவர்கள் வேலை தேடும் காலகட்டத்தில் தங்கியிருப்பதற்கு பத்து வெள்ளி கட்டணத்தில் தங்கும் வசதியை கோலாலம்பூர் மாநகரில் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது என்று இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா இயோ தெரிவித்துள்ளார்.

Y- Capsule என்ற அந்த தங்கும் வசதி திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதில் 18 க்கும் 40 க்கும் இடைப்பட்ட வயதுடைய இளையோர்கள் நாள் ஒன்றுக்கு சரசாரி 10 வெள்ளி கட்டணத்தில் தங்கியிருக்கலாம் என்று அமைச்சர் ஹன்னா இயோ குறிப்பிட்டார்.
இந்த வசதிகளை இளையோர்கள் வரும் நாளை மறுநாள் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் பெறலாம் என்பதையும் அவர் விளக்கினார்.

Related News