Dec 3, 2025
Thisaigal NewsYouTube
அடுத்த தலைமுறை ஐடி நிபுணர்களை மேம்படுத்தும் மிஸி CompTIA Network சான்றிதழ் திட்டம்
தற்போதைய செய்திகள்

அடுத்த தலைமுறை ஐடி நிபுணர்களை மேம்படுத்தும் மிஸி CompTIA Network சான்றிதழ் திட்டம்

Share:

சைபர்ஜெயா, அக்டோபர்.08-

மனித வள அமைச்சின் மலேசிய இந்தியர் திறன் மேம்பாட்டு முன்முயற்சியான மிஸியின் ஏற்பாட்டில் அடுத்த தலைமுறை ஐடி நிபுணர்களை மேம்படுத்தும் MiSI CompTIA Network பயிற்சி சான்றிதழ் திட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

சைபர்ஜெயாவில் 10 நாட்களுக்கு நடைபெற்ற MiSI CompTIA Network பயிற்சிச் சான்றிதழ் திட்டத்தில் UTM, UTeM, UKM, MMU, UNITEN மற்றும் UniMAP உள்ளிட்ட முன்னணி மலேசிய பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 25 பேர் பங்கேற்றனர்.

பங்கேற்பாளர்கள் 25 பேரும் தங்களுக்கான பயிற்சியை வெற்றிகரமாக முடித்து நிறைவு விழாவில் அதற்கான சான்றிதழையும் பெற்றனர்.

இந்த பயிற்சியானது தகவல் தொழில்நுட்பம் மற்றும் நெட்வொர்க்கிங் துறையில் மாணவர்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகும். இது தொழில்துறையில் தரமான தொழில்நுட்ப பயிற்சி மற்றும் மென் திறன் மேம்பாடு ஆகியவற்றின் கலவையின் மூலம் உலகில் வேலை வாய்ப்புச் சந்தையில் அதிகமான வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வல்லதாகும்.

CompTIA Network+ தொழில்நுட்ப பயிற்சி 5 நாட்களும், மென் திறன் மேம்பாட்டுப் பயிற்சி 3 நாட்களும், தேர்வு அமர்வர்கள் இரண்டு நாட்களும் என 10 நாட்களுக்கு இந்த பயிற்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் மனித வள அமைச்சர் YB ஸ்டீவன் சிம்மின் சிறப்புப் பணிக்கான அதிகாரி டிக்காம் லுர்ட்ஸ் கலந்து கொண்டு சிறப்பித்தார். தொழில்நுட்பத் துறையில் சிறந்து விளங்கவிருக்கும் பங்கேற்பாளர்களைப் பாராட்டும் அதே வேளையில் அவர்களுக்கு ஊக்கமூட்டும் வகையில் உற்சாகம் நிறைந்த உரையை நிகழ்த்தினார். இது வெறும் பயிற்சி மட்டும் அல்ல, பங்கேற்பாளர்களுக்கு Luminous Systems Sdn. Bhd. நிறுவனம் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் தளமாகவும் அமைந்தது.

Related News