Jul 29, 2026
Thisaigal NewsYouTube
இலக்கவியல் அமைச்சின் கீழ் Digital நேஷ்னல் பெர்ஹாட்
தற்போதைய செய்திகள்

இலக்கவியல் அமைச்சின் கீழ் Digital நேஷ்னல் பெர்ஹாட்

Share:

புத்ராஜெயா,ஜன.10
கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட அமைச்சரவை மாற்றத்தைத் தொடர்ந்து புதியதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள இலக்கவியல் அமைச்சின் கீழ் டிஜிட்டல் நேஷ்னல் பெர்ஹாட் மற்றும் CyberSecurity Malaysia செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே அமைச்சாக செயல்பட்டு வந்த தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சு, அமைச்சரவை மாற்றத்தில் இரண்டு அமைச்சுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தலைமையின் கீழ் தொடர்புத்துறை அமைச்சும், அமைச்சர் Gobind Singh Deo- தலைமையில் இலக்கவியல் அமைச்சும் தனித்தனியாக செயல்படுகின்றன.

இதில் நிதி அமைச்சரின் கழகமயமாக்கப்பட்ட துணை நிறுவனமான Digital Nasional Berhad- டிற்கு 5G அலைவரிசையும், உள்கட்டமைப்பையும் மேம்படுத்துதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தினால் தொடர்புத்துறையை வழிநடத்துவதற்கான உரிமம் Digital Nasional Berhad – டிற்கு வழங்கப்பட்டுள்ளதாக புத்ராஜெயாவில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் தொடர்புத்துறை அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் இதனை தெரிவித்தார்.

எனினும் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், தொடர்ந்து தமது தொடர்புத்துறை அமைச்சின் கீழ் செயல்படும் என்று ஃபஹ்மி ஃபட்சில் குறிப்பிட்டார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்