கோலாலம்பூர், ஜூலை.25-
கோலாலம்பூர் மாநகரில் நாளை சனிக்கிழமை நடைபெறவிருக்கும் துருன் அன்வார் பேரணியை முன்னிட்டு 16 பிரதானச் சாலைகள் மூடப்படும் என்று போலீசார் அறிவித்துள்ளனர்.
மஸ்ஜிட் நெகாரா, பசார் செனி, மஸ்ஜிட் ஜமேக், சுல்தான் அப்துல் சமாட், மஸ்ஜிட் ஜமேக் கம்போங் பாரு, சோகோ பேரங்காடி ஆகியவற்றின் பிரதானச் சாலைகளிலிருந்து பேரணி பங்கேற்பாளர்கள் டத்தாரான் மெர்டேக்காவை நோக்கி ஊர்வலமாகச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ முகமட் உசுஃப் ஜான் முகமட் தெரிவித்தார்.
போக்குவரத்து சுமூகமாக நடைபெறும் வேளையில் அனைத்து சாலைகளிலும் வாகனமோட்டிகளின் பாதுகாப்பை உறுதிச் செய்வதற்கு தலைநகரின் 16 பிரதானச் சாலைகள் மூடப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.








