ஜார்ஜ்டவுன், ஆகஸ்ட்.12-
உடல் பருமனான மாதுவை மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்வதற்கு குடும்பத்தினர், தீயணைப்பு, மீட்புப் படையினரின் உதவியை நாடினர்.
பினாங்கு, செபராங் ஜெயா, சோலோக் திங்கி, பிளாக் J1 என்ற முகவரியைச் சேர்ந்த 50 வயது மாது, உடல் பருமனால் அவதியுற்று வருகிறார். மிக பலவீனமாகக் காணப்பட்ட அந்த மாதுவை மூன்று மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி வீட்டிலிருந்து கீழே இறக்க முடியாமல் குடும்ப உறுப்பினர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
பின்னர் தீயணைப்பு, மீட்புப் படையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டு வீரர்கள் உதவியுடன் 90 கிலோ எடை கொண்ட அந்த மாது கீழே இறக்கப்பட்டதாக பினாங்கு மாநிலப் பேச்சாளர் தெரிவித்தார்.








