மலேசிய எண்ணெய் கப்பல்களை ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்ல அனுமதி வழங்கியதற்காக, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், ஈரானுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற கோலாலம்பூர்-அங்காரா உரையாடல் 2026 நிகழ்ச்சியின் மத்தியில், மலேசியாவுக்கான ஈரான் தூதர் வலியொல்லா முகமதி நஸ்ராபாதியுடன் நடந்த சந்திப்பில், தமது நன்றியை தெரிவித்துக் கொண்டதாக அன்வார் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்நடவடிக்கையானது, எரிசக்தி விநியோகத்தின் தொடர்ச்சியை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
அதேவேளையில், வாழ்வாதாரத்திற்கான அழுத்தத்தை குறைக்கவும், நாட்டின் பொருளாதார நிலைத்தன்மையை ஆதரிக்கவும் இந்த முயற்சி பெரிதும் உதவுவதாகவும் அன்வார் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஹோர்முஸ் நீரிணையில் தற்போது சிக்கித் தவிக்கும் மேலும் ஆறு மலேசியக் கப்பல்கள், அந்த நீர்வழித்தடம் வழியாகக் கட்டம் கட்டமாகச் செல்ல அனுமதிக்கப்படும் என்று வலியொல்லா தெரிவித்துள்ளார்.








