Mar 23, 2026
Thisaigal NewsYouTube
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மரணம்
தற்போதைய செய்திகள்

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மரணம்

Share:

க்ளுவாங், ஜூலை 2-

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர், வேகக்கட்டுப்பாட்டை இழந்து, விளம்பரப் பலகையில் மோதி, விபத்துக்குள்ளானதில் கடுங் காயங்களுடன் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணியளவில் ஜோகூர், க்ளுவாங், ஜாலான் பெசார் குளுவாங்கில் நிகழ்ந்தது.

மோட்டார் சைக்கிளோட்டியான 31 வயது அகமது பிர்தௌஸ் சுலைமான் மற்றும் பின் இருக்கையில் பயணித்த 25 வயது நூருல் ஷபிகா அதிரா ஜகரியா ஆகியோர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பஹ்ரின் முகமது நோ அடையாளம் கூறினார்.

அவ்விருவரும் யமஹா MT-09 ரக மோட்டார் சைக்கிளில் ஜாலான் பெசாரிலிருந்து புலதன் பத்து பஹாட்ஐ நோக்கி சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று ஏசிபி பஹ்ரின் குறிப்பிட்டார்.

Related News