Apr 16, 2026
Thisaigal NewsYouTube
பிரிக்பீல்ட்ஸில் பட்டப்பகலில் துணிகரம்: நகைக்கடையில் புகுந்து நிமிடங்களில் கொள்ளையடித்த ஆயுத கும்பல்
தற்போதைய செய்திகள்

பிரிக்பீல்ட்ஸில் பட்டப்பகலில் துணிகரம்: நகைக்கடையில் புகுந்து நிமிடங்களில் கொள்ளையடித்த ஆயுத கும்பல்

Share:

கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ் பகுதியில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில், இன்று காலை பட்டப்பகலில் புகுந்த ஆயுதமேந்திய கும்பல் பெரும் அளவிலான நகைகளை கொள்ளையடித்துச் சென்றது.

காலை சுமார் 10.48 மணியளவில், வெள்ளை நிற நிசான் அல்மேரா காரில் வந்த நான்கு முகமூடி அணிந்த நபர்கள் இந்த தாக்குதலை நடத்தினர். துப்பாக்கிகளுடன் வந்த அக்குழுவினர், முதலில் கடையின் வெளியே இருந்த பாதுகாப்பு அதிகாரியை தாக்கிவிட்டு, 'KVT கோல்ட் & டைமண்ட்ஸ்' கடைக்குள் அத்துமீறி நுழைந்தனர்.

மிகவும் திட்டமிட்ட முறையில் செயல்பட்ட கொள்ளையர்கள், ஊழியர்களை மிரட்டி அங்கிருந்த காட்சிப் பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த நகைகளைச் சில நிமிடங்களிலேயே சூறையாடினர். பின்னர், வந்த காரிலேயே மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.

இச்சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்றாலும், காயமடைந்த பாதுகாப்பு அதிகாரியின் நிலை குறித்து இன்னும் தெளிவான தகவல் கிடைக்கவில்லை.

கடந்த 2025 ஜூன் மாதம் இப்பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, தற்போது நடந்துள்ள இந்த துணிகர கொள்ளை அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தப்பியோடிய கும்பலைத் தேடி வரும் போலீஸ் துறையினர் , இது குறித்து மேலதிக விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

Related News