நாட்டின் பிரதமராக வருவதற்குப் பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங், 115 எம்.பி.க்களின் ஆதரவுடன் மாமன்னரைச் சந்திக்கவிருக்கிறார் என்று வெளியாகியுள்ள தகவலைப் பாஸ் கட்சி மறுத்துள்ளது.
பத்திரிகைகளுக்கு அனுப்பட்டுள்ள பாஸ் சின்னத்தை தாங்கிய ஓர் அறிக்கையில் இடம் பெற்றுள்ள அந்த தகவலில் உண்மையில்லை என்று பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் தக்கியுடின் ஹசான் தெரிவித்துள்ளார்.
நாட்டின் 11 ஆவது பிரதமராக பொறுப்பேற்பதற்கு மாராங் எம்.பி.யுமான ஹாடி அவாங், 115 எம்.பி.க்களின் சத்தியப் பிரமாண பிரகடன ஆவணங்களுடன் நாளை வெள்ளிக்கிழமை மாமன்னரை சந்திக்கவிருக்கிறார் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டப்பட்டு இருப்பது, பொய்யான தகவலாகும் என்று தக்கியுடின் ஹசான் விளக்கினார்.

Related News

போலீஸ் படையின் முன்னாள் நம்பர் 2-க்கு யுடிஇஎம்மில் புதிய பொறுப்பு

2027 பட்ஜெட்டில் சம்பள உயர்வா? ரமணன் சூசகம்

விசா இல்லா வசதியை வேலைக்காக பயன்படுத்த வேண்டாம் – இந்தியப் பிரஜைகளுக்கு எச்சரிக்கை

25-வது மாடியிலிருந்து விழுந்த கட்டுமானத் தொழிலாளி உயிரிழப்பு

ருக்குன் நெகாராவைக் கேலி செய்ததாக நாடகக் கலைஞர்கள் மீது விசாரணை


