Dec 3, 2025
Thisaigal NewsYouTube
வர்த்தகப் பெண்மணி டத்தின் ஶ்ரீ பமேலா லிங் காணாமல் போனதற்கு எஸ்பிஆர்எம்மிற்கு தொடர்பில்லை
தற்போதைய செய்திகள்

வர்த்தகப் பெண்மணி டத்தின் ஶ்ரீ பமேலா லிங் காணாமல் போனதற்கு எஸ்பிஆர்எம்மிற்கு தொடர்பில்லை

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.09-

வர்த்தகப் பெண்மணி டத்தின் ஶ்ரீ பமேலா லிங் காணாமல் போனதற்கு, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம்மிற்குத் தொடர்பில்லை என்று நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி, கோலாலம்பூர், செராஸில் உள்ள தனது வீட்டிலிருந்து இ-ஹெய்லிங் வாகனத்தில் புத்ராஜெயாவில் உள்ள எஸ்பிஆர்எம் தலைமையகத்தில் விசாரணைக்கு செல்வதாகப் புறப்பட்டு சென்ற 42 வயதுடைய பெண்மணி காணாமல் போனதாகப் புகார் செய்யப்பட்டுள்ளது.

இதில் ஏதோ ஒரு விவகாரம் மறைக்கப்படுவதாகக் கூறப்படுவது, முற்றிலும் வதந்தியாகும் என்று எஸ்பிஆர்எம் தெரிவித்துள்ளது. அந்த பெண்மணி காணாமல் போன விவகாரத்தில் போலீசாரின் விசாரணையில் இதுவரையில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை. ஆனால், அவர் காணாமல் போனது, எஸ்பிஆர்எம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டதாகும் என்று அந்த வட்டாரம் தெரிவித்தது.

Related News