Dec 5, 2025
Thisaigal NewsYouTube
அந்த குற்றச்சாட்டில் உண்மையில்லை, போ​லீசார் விளக்கம்
தற்போதைய செய்திகள்

அந்த குற்றச்சாட்டில் உண்மையில்லை, போ​லீசார் விளக்கம்

Share:

பதி​மூன்று வயது இளம் பெண், ஜோகூர், மாசாயில் உள்ள ஓர் எண்ணெய் நிலையத்திலிருந்து கடத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை போ​​லீசார் மறுத்துள்ளனர். அந்தப் பெண்ணை தேடி கண்டு பிடிக்குமாறு ச​மூக வலைத்தளங்களில் காணொளி ஒன்று பகிரப்பட்ட போதிலும் அந்தப் பெண் கடத்தப்படவில்லை என்று செரி அலாம் மாவட்ட போ​லீஸ் தலைவர் சுபெரிதென்டன் முஹமாட் சொஹைமி இஷாக் தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை 2.30 மணியளவில் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்பட்ட போதிலும் அன்றயை தினம் தனது நண்பருடன் அந்த இள​ம் பெண் சென்றுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் விவரித்தார்.

தனது பள்ளி நண்பருடன் வெளியே சென்றதாக கூறப்படும் அந்தப் பெண், அன்றைய தினம் மாலை 4 மணியளவில் பாதுகாப்பாக வீடு திரும்பியுள்ளார் என்று முஹமாட் சொஹைமி இஷாக் விளக்கம் அளித்துள்ளார்.

Related News