Oct 16, 2026
Thisaigal NewsYouTube

ஏமாற்றியதாக இரண்டு சகோதரர்கள் மீது குற்றச்சாட்டு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஏமாற்றியதாக இரண்டு சகோதரர்கள் மீது குற்றச்சாட்டு

சிரம்பான், டிச.19-


மதுபானம் மற்றும் இதர இரண்டு வகையான பொருட்கள் விற்பனையில் உள்ளதாக,/ இல்லாத ஒன்றை கூறி, இரண்டு ஆடவர்களை நம்பவைத்து 4 லட்சத்து 57 ஆயிரத்து 682 ரிங்கிட் மோசடி செய்ததாக இரண்டு சகோதரர்கள், சிரம்பான், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.

31 வயது கோ சிங் ஜின் மற்றும் 40 வயது கோ கிம் சாய் என்ற அவ்விரு சகோதரர்கள் இரு வெவ்வேறு மாஜிஸ்திரேட்டுகளின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சசாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி மதியம் 12.30 மணியளவில் சிரம்பான் 2- வில் உள்ள ஓர் உணவகத்தில் இரண்டு நபர்களை நம்பவைத்து இந்த மோசடியை செய்ததாக அவ்விரு சகோதரர்களும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →