Dec 4, 2025
Thisaigal NewsYouTube
குறைந்த பட்ச சம்பள விகிதத்தை 2 ஆயிரம் வெள்ளிக்கு மேல் உயர்த்துவீர் -நாடாளுமன்றத்தில் பரிந்துரை
தற்போதைய செய்திகள்

குறைந்த பட்ச சம்பள விகிதத்தை 2 ஆயிரம் வெள்ளிக்கு மேல் உயர்த்துவீர் -நாடாளுமன்றத்தில் பரிந்துரை

Share:

நாட்டில் தற்போது அமலில் உள்ள 1,500 வெள்ளி குறைந்த பட்ச சம்பள முறை விகிதத்தை 2 ஆயிரம் வெள்ளிக்கு மேல் உயர்த்துமாறு பக்காத்தான் ஹராப்பான் எம்.பி. ஒருவர், இன்று நாடாளுமன்றத்தில் பரிந்துரை செய்துள்ளார்.

மக்களின் வாழ்க்கை செலவினம் உயர்ந்து கொண்டு இருப்பதால் குறைந்த பட்ச சம்பள விகதத்தை 2 ஆயிரம் வெள்ளிக்கும் மேல் உயர்த்துவது காலத்தின் கட்டாயமாகும் என்ற ஈப்போ பாராட் எம்.பி. எம். குலசேகரன் வாதிட்டார்.

மக்களின் வாழ்க்கைச் செலவினம் உயர்ந்து கொண்டு இருப்பதால் நகர்ப்புறங்களில் வசிக்கும் அவர்களின் நடப்புத் தேவையை சமாளிக்க திருமணம் ஆகாத தனிநபரின் குறைந்த பட்ச சம்பள விகிதம் 2,700 வெள்ளியாகவும், திருமணமனமாகி குழந்தை இல்லாத தம்பதியருக்கு 4,500 வெள்ளியாகவும், இரண்டு குழந்தைகளை கொண்டுள்ள தம்பதியருக்கு 6,500 வெள்ளியாக உயர்த்தப்பட வேண்டும் என்று கடந்த 2017 ஆம் ஆண்டு மத்திய பொருளகமான பேங்க் நெகாரா மலேசியா தமது ஆய்வில் பரிந்துரை செய்து இருப்பதையும் குலசேகரன் சுட்டிக்காட்டினார்.

Related News