அலோர் ஸ்டார், ஆகஸ்ட்.25-
தங்களைப் பிடிப்பதற்கு முயற்சி செய்த போலீஸ்காரர் ஒருவரைக் கொன்றதாக நான்கு இளைஞர்கள் அலோர் ஸ்டார் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாடட்ப்பட்டனர்.
24 வயது முகமட் பாட்ரி முகமட் அஸாம், 26 வயது முகமட் ஹாஃபிஸ் காஸாலி, 25 வயது பட்ரி இமான் அப்துல் நாசீர் மற்றும் 34 வயது முகமட் சைஃபுடின் முகமட் நோர் என்ற அந்த நான்கு ஆடவர்கள் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி பிற்பகல் 3.43 மணியளவில் அலோர் ஸ்டார், தாமான் கோல்ஃபில் உள்ள ஒரு வீட்டில் கெடா போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த 35 வயது கோப்ரல் முகமட் ஹாஃபிஸுல் இஸாம் மஸ்லான் என்பவரைக் கொன்றதாக அந்த நால்வரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.








