Nov 6, 2026
Thisaigal NewsYouTube

பேராக் சுல்தானின் 70ஆவது பிறந்தநாள்: பெர்னாமா தலைமைச் செய்தி ஆசிரியர் அருள் ராஜூவுக்கு 'டத்தோ' விருது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பேராக் சுல்தானின் 70ஆவது பிறந்தநாள்: பெர்னாமா தலைமைச் செய்தி ஆசிரியர் அருள் ராஜூவுக்கு 'டத்தோ' விருது

தேசிய செய்தி நிறுவனமான பெர்னாமாவின் தலைமை ஆசிரியர் அருள் ராஜூ துரை ராஜுக்கு, பேரா மாநில சுல்தான் சுல்தான் நஸ்ரின் ஷாவின் பிறந்தநாளை முன்னிட்டு டத்தோ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

செய்தித்துறையில் நீண்டகாலமாக ஆற்றிவரும் சேவையை அங்கீகரிக்கும் வகையில், அவருக்கு டத்தோ படுகா மாஹ்கோத்தா பேராக் எனும் அந்தஸ்தை தாங்கிய விருது வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 1991ஆம் ஆண்டு பெர்னாமாவில் செய்தியாளராகத் தனது ஊடகப் பயணத்தைத் தொடங்கிய அருள் ராஜூ, தற்போது அந்நிறுவனத்தின் தலைமை ஆசிரியராகப் பொறுப்பு வகிக்கிறார்.

அவருக்குக் கிடைத்துள்ள இந்த அங்கீகாரம், மலேசிய ஊடகத் துறைக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது.

அதேவேளையில் இந்த விருதுப் பட்டியலில் இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ அனிஸ் ரசனா முஹமட் ஸைனுடின் முதலிடம் பெற்றுள்ளார்.

மேலும், கடந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் 25-ஆம் தேதி சுங்கத்துறை தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்ட முதல் பெண் என்ற வரலாற்றைப் படைத்த 56 வயதான அனிஸ் ரசனா, டத்தோ ஸ்ரீ அந்தஸ்தை வழங்கும் டத்தோ ஶ்ரீ படுக்கா மாஹ்கோத்தா பேராக் விருதையும் பெற்றார்.

அதேவேளையில், டத்தோ ஶ்ரீ பங்லிமா அந்தஸ்தை வழங்கும் டத்தோ ஶ்ரீ பங்லிமா தாமிங் சாரி, SPTS எனும் விருதை மலேசிய இராணுவப் படைத் தலைவர் ஜெனரல் டான் ஶ்ரீ மாலிக் ரஸாக் சுலைமான் பெற்றுள்ளார்.

டத்தோ அந்தஸ்தை வழங்கும் டத்தோ படுக்கா சுரா ஶ்ரீ மஞ்சா கினி, DPCM எனும் விருது தேசிய கணக்காய்வாளர் நஸ்ரான் ஓமாருக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →