Dec 4, 2025
Thisaigal NewsYouTube
பிரேதங்களை விரைந்து ஒப்படைப்பதில் லஞ்சம் மேலும் இரு மருத்துவ அதிகாரிகள் பிடிபட்டனர்
தற்போதைய செய்திகள்

பிரேதங்களை விரைந்து ஒப்படைப்பதில் லஞ்சம் மேலும் இரு மருத்துவ அதிகாரிகள் பிடிபட்டனர்

Share:

பிணப்பெட்டி நிறுவனங்களுடன் கைக்கோர்த்துக்கொண்டு, முஸ்லிம் அல்லாதவர்களின் பிரேதங்களை விரைந்து ஒப்படைப்பதில் லஞ்சம் பெற்று வருவதாக கூறப்படும் மருத்துவ அதிகாரிகளுக்கு எதிராக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் மேற்கொண்டு வரும் கைது வேட்டையில் மேலும் இரண்டு மருத்துவ அதிகாரிகள் பிடிபட்டனர்.

ஒவ்வொரு பிணத்திற்கும் 100 வெள்ளி முதல் 600 வெள்ளி வரை லஞ்சம் பெற்று வருவதாக கூறப்படும் மருத்துவ அதிகாரிகளுக்கு எதிராக முழு வீச்சில் எஸ்.பி.ஆர்.எம் மேற்கொண்ட கைது நடவடிக்கையில் பிணத்தை ஒப்படைப்பதில் 3,500 வெள்ளி வரை லஞ்சம் பெற்றதாக கூறப்படும் இரண்டு மருத்துவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

30 மற்றும் 40 வயது மதிக்கத்தக்க அந்த இரண்டு மருத்துவ அதிகாரிகளும் நெகிரி செம்பிலான் மாநிலத்தை சேர்ந்த மருத்துவமனைப் பணியாளர்கள் ஆவர்.

இன்று சிரம்பான் மாஜிஸ்திரேட் நீதிமன்றதில் நிறுத்தப்பட்டுள்ள அந்த இரண்டு மருத்துவ அதிகாரிகளையும் ஐந்து நாட்களுக்கு தடுப்புக்காவலில் வைப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Related News