Jul 30, 2026
Thisaigal NewsYouTube
கூரையின் மேலிருந்து அந்நிய தொழிலாளர் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

கூரையின் மேலிருந்து அந்நிய தொழிலாளர் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்தார்

Share:

பினாங்கு,ஜூலை 13-

பினாங்கு, பெராய்யில் உள்ள தொழிற்சாலையில் 12 மீட்டர் உயரத்திலான கூரையின் மேலிருந்து அந்நிய தொழிலாளர் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்தார்.
இன்று பிற்பகல் மணி 12:30-க்கு 29 வயதான அந்த ஒப்பந்த வேலைக்காரர் சம்பந்தப்பட்ட தொழிற்சாலையின் கூரையில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டிருந்த போது தவறி கீழே விழுந்தார்.
சம்பவம் குறித்த அவசர அழைப்பை பெற்றதும் புலனாய்வு அதிகாரிகள் நிகழ்விடத்திற்கு விரைந்ததாக பினாங்கு மாநில வேலையிட பாதுகாப்பு – சுகாதார துறை இயக்குநர் அலுவலகம் தெரிவித்தது.அயலக தொழிலாளரின் மரணத்தை தொடர்ந்து விசாரணை முடியும் வரை தொழிற்சாலையின் அனைத்து பராமரிப்பு பணிகளையும் நிறுத்துமாறு அது உத்தரவிட்டது.
வேலையிட பாதுகாப்பையும், சுகாதாரத்தையும் உறுதிச் செய்வது ஒவ்வொரு தொழிற்சாலை அல்லது முதலாளியின் கடமை என்பதை JKKP மீண்டும் நினைவுறுத்தியது.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்