Sep 27, 2026
Thisaigal NewsYouTube
தெலுக் இந்தானில் பயங்கரம்: கொள்ளையர்களின் வெட்டுக்கு ஆளான முதியவர் பலி
தற்போதைய செய்திகள்

தெலுக் இந்தானில் பயங்கரம்: கொள்ளையர்களின் வெட்டுக்கு ஆளான முதியவர் பலி

Share:

தெலுக் இந்தான், பெக்கான் பாரு பகுதியில் இன்று அதிகாலை நிகழ்ந்த துணிகரக் கொள்ளைச் சம்பவத்தில் 69 வயது முதியவர் ஒருவர் வெட்டிக்கொல்லப்பட்டார்.

அதிகாலை 6 மணியளவில், முதியவரின் மனைவி வீட்டின் முற்றத்தில் சாமி கும்பிடுவதற்கு வழிபாட்டுப் பொருட்களை அடுக்கிக் கொண்டிருந்தபோது, முகமூடி அணிந்த மூன்று நபர்கள் சுற்றுச்சுவர் ஏறி வீட்டிற்குள் புகுந்தனர். ஓய்வெடுத்துக்கொண்டிருந்த முதியவரைப் பாராங்கத்தியால் மிரட்டி நகைகளைக் கேட்ட கொள்ளையர்கள், அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் வலது கை மற்றும் இடது உள்ளங்கையில் பலத்த காயமடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அதிர்ஷ்டவசமாக முதியவரின் மனைவி காயமின்றி உயிர் தப்பினார். நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற 20 முதல் 30 வயதுடைய அந்த மூன்று மர்ம நபர்களைப் பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் என்று ஹிலிர் பேரா மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் சுவா கோக் லியான் தெரிவித்தார்.

Related News

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்