Oct 2, 2026
Thisaigal NewsYouTube

நஜீப் வழக்கில் ஜனவரி 5 ஆம் தேதி தீர்ப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நஜீப் வழக்கில் ஜனவரி 5 ஆம் தேதி தீர்ப்பு

கோலாலம்பூர், நவம்பர்.24-

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக், தனது எஞ்சிய சிறைவாசத்தை வீட்டுக் காவலில் கழிக்க வேண்டுமா? இல்லையா? என்பது குறித்து கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அடுத்த ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி தீர்ப்பு அளிக்கவிருக்கிறது.

நஜீப்பின் வழக்கறிஞர் மற்றும் அரசு அரசு வழக்கறிஞர் ஆகியோரின் வாதத் தொகுப்புகளைச் செவிமடுத்த உயர் நீதிமன்ற நீதிபதி லோக் யீ சிங், வரும் ஜனவரி 5 ஆம் தேதி காலை 8 மணிக்குத் தீர்ப்பு அளிக்கப்படும் என்றார்.

தம்முடைய எஞ்சிய சிறைத் தண்டனைக் காலத்தை, வீட்டுக் காவலில் கழிக்க வேண்டும் என்று முன்னாள் மாமன்னர், தமக்கு கூடுதல் அரசாணை உத்தரவு ஒன்றை வழங்கியதாகக் கூறி, டத்தோ ஶ்ரீ நஜீப் தொடுத்திருந்த வழக்கில் இரு தரப்பினரும் இன்று வாதத் தொகுப்பைச் சார்வு செய்திருந்தனர்.

SRC Internasional நிறுவனத்திற்குச் சொந்தமான 42 மில்லியன் ரிங்கிட்டை முறைகேடு புரிந்த குற்றத்திற்காக 72 வயது நஜீப், கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 ஆம் தேதியிலிருந்து சிறைத் தண்டனையை அனுபவித்து வருகிறார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
நஜீப் வழக்கில் ஜனவரி 5 ஆம் தேதி தீர்ப்பு | Thisaigal News