Oct 17, 2026
Thisaigal NewsYouTube

எம்.சி.எம்.சி. தீவிர விசாரணை செய்து வருகிறது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
எம்.சி.எம்.சி. தீவிர விசாரணை செய்து வருகிறது

புத்ராஜெயா, நவ.13-


அரசாங்க பொது பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவன், சுயமாக தயாரித்த ஆபாசப்படத்தை சமூக வலைத்தளங்களில் விற்பனை செய்தது தொடர்பில் மலேசிய தொடர்புத்துறை பல்லூடக ஆணையமான எம்.சி.எம்.சி. தீவிரமாக விசாரணை செய்து வருகிறது.

இந்த ஒழுக்ககேடான செயல் தொடர்பில் அந்த மாணவனின் காதலி என்று நம்பப்படும் தனியார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக அந்த ஆணையம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எனினும் அந்த மாணவனின் வயதை அந்த ஆணையம் வெளியிடவில்லை. சம்பந்தப்பட்ட மாணவனின் இந்த செயல், கடந்த 2021 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் எக்ஸ் பயனர்களுக்கு தனிப்பட்ட முறையில் சுயமாக தயாரித்த ஆபாசப்பட படங்களை உள்ளடக்கிய உள்ளடக்கத்தை அவன் சமூக வலைத்தளங்களில் விற்பனை செய்து வந்துள்ளான் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அந்த ஆணையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →