Jul 29, 2026
Thisaigal NewsYouTube
MAHB நிறுவனத்தை BLACKROCK நிறுவனம் கொள்முதல் செய்வதை, அம்னோ அமைச்சர்கள் எதிர்ப்பர்! கைரி நம்பிக்கை
தற்போதைய செய்திகள்

MAHB நிறுவனத்தை BLACKROCK நிறுவனம் கொள்முதல் செய்வதை, அம்னோ அமைச்சர்கள் எதிர்ப்பர்! கைரி நம்பிக்கை

Share:

MALAYSIAN AIRLINES HOLDINGS BERHAD - MAHB நிறுவனத்தை, இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்படும் BLACKROCK நிறுவனம் கொள்முதல் செய்யும் விவகாரம், அமைச்சரவைக் கொண்டு செல்லப்பட்டால், அம்னோ-வை சேர்ந்த அமைச்சர்கள் அதனை கடுமையாக எதிர்ப்பார்கள்.

அக்கட்சியின் முன்னாள் இளைஞர் பிரிவு தலைவர் கைரி ஜமாலுதீன், அந்த நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.

தனக்கு தெரிந்து அம்னோ-வை சேர்ந்த அமைச்சர்கள் யாரும் அந்த பரிந்துரைக்கு உடன்படமாட்டார்கள். அவர்கள் மீது தாம் இன்னமும் நல்லதொரு எதிர்பார்ப்பைத் தாம் கொண்டுள்ளதாக கைரி கூறினார்.

MAHB நிறுவனத்தை வேறு நிறுவனங்களுக்கு விற்பதில் தங்களுக்கு எவ்வித பிரச்சனைகளும் இல்லை. ஆனால், பாலஸ்தீனத்துக்கு எதிரான தாக்குதல்களை ஆதரிக்கும் BLACKROCK நிறுவனத்திற்கு வழங்குவதைத்தான் தாங்கள் எதிர்கின்றோம்.

அந்நிறுவனத்திற்கு, MAHB நிறுவனம் விற்கப்பட்டால், பாலஸ்தீனத்துக்கு எதிரான தாக்குதலை ஆதரிப்பதற்கு சமமாகும் என கைரி கூறினார்.

இதனிடையே, அமெரிக்காவைச் சேர்ந்த BLACKROCK நிறுவனத்திற்கு, MAHB நிறுவனத்தை விற்கும் விவகாரம் குறித்து முந்தைய அரசாங்கம் ஏன் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என கைரி-யிடம் வினவப்பட்டது.

அது குறித்து பதிலுரைத்த அவர், அவ்விவகாரம் அமைச்சரவையின் கீழ் இல்லை எனவும் பெரும்பாலும், கசானா நேஷனல் குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்படாது என்றார்.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்