Jun 30, 2026
Thisaigal NewsYouTube
சுங்கை பூலோவில் 13 வயது சிறுமி சடலமாக மீட்பு
தற்போதைய செய்திகள்

சுங்கை பூலோவில் 13 வயது சிறுமி சடலமாக மீட்பு

Share:

சிலாங்கூர் மாநிலம் சுங்கை புலோவில் உள்ள வீடு ஒன்றில், 13 வயது சிறுமி சடலமாகக் கண்டறியப்பட்ட நிலையில், அச்சம்பவத்தை குழந்தைப் பராமரிப்பதில் ஏற்பட்ட கவனக்குறைவு என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று மாலை 6.27 மணியளவில், குழந்தையின் மரணம் குறித்துத் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகவும், சம்பவ இடத்திலேயே மருத்துவ அதிகாரி ஒருவர் சிறுமியின் மரணத்தை உறுதிப்படுத்தியதாகவும் சுங்கை புலோ மாவட்ட போலீஸ் தலைவர் ஹபீஸ் நோர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சிறுமியின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய பிரேத பரிசோதனை நடத்தப்படும் என்றும் ஹபீஸ் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக மூன்று பேரிடம் போலீசார் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வழக்கானது 'குழந்தைகள் சட்டம் 2001'-இன் பிரிவு 31(1)(a)-இன் கீழ் வருவது குறிப்பிடத்தக்கது.

Related News