புத்ராஜெயா, நவம்பர்.06-
லஞ்ச ஊழல் தொடர்பில் கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் மூத்த உயர் அதிகாரி உட்பட நால்வர், நாளை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவிருகின்றனர்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் மேற்கொண்ட Op DC நடவடிக்கையில் கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் அந்த மூத்த உயர் அதிகாரி பிடிபட்டுள்ளார். அவர் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நாளை காலையில் குற்றஞ்சாட்டப்படவிருக்கிறார் என்று எஸ்பிஆர்எம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எஸ்பிஆர்எம்மின் Op Tiger நடவடிக்கையில் பிடிபட்ட இரண்டு வங்கி அதிகாரிகள் மற்றும் ஒரு முன்னாள் வங்கி அதிகாரி ஆகியோர் ஷா ஆலாம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவிருக்கின்றனர் என்று அந்த ஆணையம் அறிவித்துள்ளது.








