Oct 18, 2026
Thisaigal NewsYouTube

பாலியல் பலாத்காரம், அந்நிய ஆடவர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பாலியல் பலாத்காரம், அந்நிய ஆடவர்

செர்டாங்,செப்டம்பர் 21-

செர்டாங், ஸ்ரீ கெம்பங்கா-னில் ஒன்பது வயது சிறுமியை பாலியல் பலாக்காரம் புரிந்து விட்டு தப்பிவிட்டதாக கூறப்படும் அந்நிய ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று இரவு 11 மணியளவில் சற்று தொலைவில் தனது தாயாரின் நேரடிப் பார்வையில் இருந்த அந்த சிறுமியிடம் சம்பந்தப்பட்ட ஆடவர் பாலியல் சேட்டையில் ஈடுபட்டதாக செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஏ.ஏ. அன்பழகன் தெரிவித்தார்.

தனது தாயார் வேலை செய்யும் இடத்தில், மற்ற சிறுமிகளுடன் அந்த சிறுமி விளையாடிக்கொண்டிருந்த போது நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற போலீஸ் புகார் அடிப்படையில் 35 வயதுடைய அந்த அந்நிய ஆடவர் கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →