கோலாலம்பூர், டிசம்பர்.11-
மலேசியாவில் கல்வி பயிலும் இந்தோனேசியாவைச் சேர்ந்த மாணவர்களுக்கு மலேசிய அரசாங்கம் தலா 500 ரிங்கிட்டை கருணைத் தொகையாக வழங்கும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
இந்தோனேசியா ஆச்சேவிலும், வட சுமத்ராவிலும் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளச் சீற்றத்தில் பாதிக்கப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட மாணவர்களின் குடும்பத்தினரின் சிரமத்தை கருத்தில் கொண்டு தொடக்க நிதியாக இந்தக் கருணைத் தொகை வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இரண்டு அண்டை நாடுகளான மலேசியாவும் இந்தோனேசியாவும் கொண்டுள்ள கூட்டு மற்றும் குடும்ப ரீதியான உறவின் அடையாளமாக மலேசியாவில் பயிலும் இந்தோனேசிய மாணவர்களுக்குத் தலா 500 ரிங்கிட் கருணைத் தொகை வழங்கப்படவிருப்பதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.








