கோலாலம்பூர், நவம்பர்.17-
தொழிலாளர் சேமநிதி வாரியமான இபிஃஎப், இவ்வாண்டு செப்டம்பர் மாதம் வரை ஒன்பது மாதங்களுக்கு கிட்டத்தட்ட 64 பில்லியன் ரிங்கிட் முதலீட்டு வருவாயை ஈட்டியுள்ளது.
இது கடந்த 2024 ஆம் ஆண்டு இதே காலக் கட்டத்துடன் ஒப்பிடுகையில் 11 விழுக்காடு அதிகமாகும். அவ்வாண்டில் 57.58 பில்லியன் ரிங்கிட்டை இபிஃஎப் ஈட்டியதாக அந்த வாரியம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2025 முதலாவது காலாண்டில் 25.07 பிலிலியன் ரிங்கிட்டை இபிஃஎப் முதலீட்டு வருவாயாக ஈட்டியது. இதே காலக் கட்டத்தில் கடந்த ஆண்டு 19.67 பில்லியன் ரிங்கிட்டை அது ஈட்டியது. இந்த தொகையானது, இவ்வாண்டுடன் ஒப்பிடுகையில் 27 விழுக்காடு அதிகமாகும்.
இபிஃஎப்பின் முதலீட்டு வருமானத்திற்கு பெரும் பங்களிப்பாக விளங்கும் பங்குகளின் மதிப்பு, தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.








