கோல சிலாங்கூர், ஆகஸ்ட்.22-
அண்மையில் கோல சிலாங்கூர் மாவட்டத்தில் இரு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக இரண்டு ஆடவர்கள் மீது இன்று ஷா ஆலாம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
நீதிபதி நூருல் மார்டியா முகமட் ரெட்ஸா முன்னிலையில் தங்களுக்கு எதிராக வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டை 22 வயது முகமட் தவுஃவிக் ஹைக்கால் எடி ஃபஸ்லி மற்றும் 29 வயது முகமட் எஸ்கில் முகமட் நோர் ஆகியோர் மறுத்து விசாரணை கோரினர்.
கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி அதிகாலை 5.30 மணியளவில் பாசீர் பெனாம்பாங்கில் உள்ள ஒரு கடல் உணவு விற்பனை நிலையத்தில், உள்ளூர் நபர் ஒருவரிடம் 700 ரிங்கிட் ரொக்கத்தை அவர்கள் இருவரும் கூட்டாகக் கொள்ளையிட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டனர்.








