கோலாலம்பூர், ஜூலை.26-
கோலாலம்பூர் டத்தாரான் மெர்டேக்காவில் இன்று நடைபெற்ற பேரணியில் பங்கு கொண்ட மாது ஒருவர் மூச்சுத் திணறலுக்கு ஆளாகினார். பின்னர் அவர் உடனடியாக கோலாலம்பூர் பெரிய மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார்.
மாலை 4 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் 30 வயது மாதுவுக்கு ரத்தத்தில் சீனியின் அளவு குறைந்ததைத் தொடர்ந்து அவர் மூச்சுத் திணறலுக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது.
சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர், கோலாலம்பூர் பெரிய மருத்துவமனைக்கு இஎம்ஆர்எஸ் பிரிவின் மூலம் கொண்டுச் செல்லப்பட்டார்.








