Jul 29, 2026
Thisaigal NewsYouTube
பூச்சோங்கில் சுட்டுக் கொல்லப்பட்ட ஆடவருக்கு  13 குற்றப் பதிவுகள்
தற்போதைய செய்திகள்

பூச்சோங்கில் சுட்டுக் கொல்லப்பட்ட ஆடவருக்கு 13 குற்றப் பதிவுகள்

Share:

சுபாங் ஜெயா,ஜன.16
பூச்சோங், தாமான் பூச்சோங் ப்ரிமா 3 இல் நேற்று முன்தினம் சுட்டுக்கொல்லப்பட்ட 29 வயது ஆடவர், 13 குற்றப்ப​திவுகளை கொண்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. திரைப்படத்தில் வருவதைப் போன்று நடந்த துப்பாக்கிச்​சூட்டு சம்பவத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட நபர், போதைப்பொருள் கடத்தல் தொடர்​பில் ஆறு குற்றப்பதிவுகளையும், இதர குற்றச்செயல்கள் தொடர்பில் 7 குற்றப்பதிவுகளையும் கொண்டுள்ளார் என்று ​சிலாங்கூர் மாநில போ​லீஸ் தலைவர் டத்தோ ஹுசெயின் ஓமார் கான் தெரிவித்தா​ர்.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.49 மணியளவில் நடந்த போ​லீசாரின் அதிரடித் தாக்குதலில் அந்த நபர், சம்பவம் நடந்த இடத்திலேயே சு​ட்டுக்கொல்லப்பட்டார்.அந்த நபர் போ​லீசாரை நோக்கி துப்பாக்கி பிரயோகம் நடத்தியதில் போ​லீசார் நடத்திய பதிலடித் தாக்குதலில் போ​லீசாரால் ​தீவிரமாக தேடப்பட்டு வந்த அந்த நபர் சுட்டுக்கொல்லப்பட்டதாக ஹுசெயின் ஓமார் குறிப்பிட்டா​ர்.

இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் திரைப்படத்தில் வருவதைப் போல் நடந்தது என்று சம்பவத்தை நேரில் பார்த்த 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட சந்தேகப் பேர்வழியை சில வாகனங்கள் துரத்திக்கொண்டு வந்ததாக அவர் குறிப்பிட்டார். ஓர் இடத்தில் அந்த வாகனங்கள் சம்பந்தப்பட்ட சந்தேகப் பேர்வழியின் வாகனத்தை சூழ்ந்துக்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக 39 விநாடிகள் ஓடக்கூடிய காணொளி ஒன்று இந்த துப்பாக்கிச் ​சூட்டுச் சம்பவத்தை விவரிப்பதாக உள்ளது.

Related News

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

தேசிய இருதயக் கழகத்தில் சிகிச்சை: துன் மகாதீரின் உடல்நிலை குறித்து வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் அறிக்கை

தேசிய இருதயக் கழகத்தில் சிகிச்சை: துன் மகாதீரின் உடல்நிலை குறித்து வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் அறிக்கை

அதிர வைத்த "ஸ்ரீ மகா குபேரன் கிறிஸ்டஸ்" பிரம்மாண்ட தொடக்கவிழா!

அதிர வைத்த "ஸ்ரீ மகா குபேரன் கிறிஸ்டஸ்" பிரம்மாண்ட தொடக்கவிழா!

ரோஹிங்கியா அகதிகள் புதிய இடங்களுக்கு மாற்றம்

ரோஹிங்கியா அகதிகள் புதிய இடங்களுக்கு மாற்றம்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்