முன்னாள் பாலர் பள்ளி ஆசிரியை எம். இந்திரா காந்தி, போலீஸ் படைத் தலைவர் காலிட் இஸ்மாயிலுக்கு எதிராகத் தாக்கல் செய்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கானது தொடர அனுமதி வழங்கப்படுமா என்பது குறித்து ஈப்போ உயர்நீதி மன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.
தீர்ப்பு குறித்து உறுதியாக எதையும் கூற முடியாத நிலையில் இருந்தாலும், நீதியே நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கை இருப்பதாக இந்திரா காந்தி தெரிவித்துள்ளார்.
போலீசாரை குற்றம் சாட்டுவது தமது நோக்கம் அல்ல எனக் குறிப்பிட்டுள்ள அவர், பல ஆண்டுகளாக காணாமல் போன தனது மகள் பிரசன்னா திட்டாயை கண்டுபிடிப்பதே தமது முக்கிய நோக்கம் என்பதையம் வலியுறுத்தியுள்ளார்.
இந்திரா காந்தியின் இந்த வழக்கானது, கடந்த 2014 -ஆம் ஆண்டு, மே 30 ஆம் தேதி, நீதிமன்றம் வழங்கிய உத்தரவுகளை போலீசார் தொடர்ந்து அமல்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டை மையமாகக் கொண்டது.
அந்த உத்தரவுகளில், முன்னாள் கணவர் கே. பத்மநாபன்வை கைது செய்து, குழந்தையை மீட்டெடுக்க வேண்டும் என்பதும் அடங்கும்.
இதனிடையே, போலீசார் தங்களின் கடமையைச் சிறப்பாக நிறைவேற்றியிருந்தால், இந்த வழக்கில் குறைந்தபட்சம் சில முன்னேற்றங்கள் கிடைத்திருக்கும் என்ற ஏமாற்றத்தையும் இந்திரா காந்தி வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், குற்றவாளிகளை விரைவாக கண்டுபிடிக்கும் திறன், மலேசிய போலீசாருக்கு இருந்த போதும், இந்த வழக்கில் நீண்டகால மௌனம் நிலவுவது ஏமாற்றமளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, போலீஸ் தலைவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க இது இந்திராவின் இரண்டாவது முயற்சியாகும்.
கடந்த ஆண்டு நவம்பர் 17 ஆம் தேதி, இந்த மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், கடந்த பிப்ரவரி 27 -ஆம் தேதி விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில் இந்திரா காந்தி தாக்கல் செய்துள்ள நீதிமன்ற அவமதிப்பு மனுவானது, கடந்த 2014 -ஆம் ஆண்டு மே 30 -ஆம் தேதி, உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுகளை போலீசார் தொடர்ந்து அமல்படுத்தத் தவறியதாக கூறப்படும் குற்றச்சாட்டை மையமாகக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த உத்தரவுகளில், அவரது மகளை மீட்டெடுக்கவும், முன்னாள் கணவர் கே. பத்மநாபன்வை கைது செய்யவும் போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.








