கோலாலம்பூர், செப்டம்பர்.26-
கடந்த 2022 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் மற்றும் 2023 ஆம் ஆண்டு மாநில சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, பெரிக்காத்தான் நேஷனல் ஏற்பாடு செய்த இரண்டு பிரச்சார நிகழ்வுகளில் தன்னை அவதூறாகப் பேசியதற்காக சிலாங்கூர், பாஸ் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், ஜசெக. பாங்கி எம்.பி. ஷாரெட்ஸான் ஜொஹானிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.
ஜசெக. பாங்கி எம்.பி. ஷாரெட்ஸான் ஜொஹான், கம்யூனிச சித்தாந்தத்தை ஆதரிக்கும் ஒரு நேர்மையற்ற மற்றும் மதச் சார்பற்ற முஸ்லிம் என்று குற்றஞ்சாட்டியது மூலம் தாம் தவறு இழைத்து விட்டதாக சிலாங்கூர் சுங்கை ரமால் பாஸ் சட்டமன்ற உறுப்பினர் முகமட் ஷாஃபி ங்கா, தனது மன்னிப்புக் கோரிக்கையை முகநூலில் பதிவிட்டுள்ளார்.
தம்முடைய அறிக்கைகள் முற்றிலும் உண்மையற்றவை, ஆதாரமற்றவை மற்றும் தகுதியற்றவை என்பதைத் தாம் ஒப்புக் கொள்வதாக அந்த பாஸ் சட்டமன்ற உறுப்பினர் தமது மன்னிப்புக் கோரிக்கையில் தெரிவித்துள்ளார்.








