சுபாங் ஜயா, பன்டார் சன்வே சாலை ஓரத்தில் தொப்புள் கொடியுடன் ஓர் ஆண் குழந்தை பிளாஸ்டிக் பையில் கண்டெடுக்கப்பட்டது.
நேற்று மதியம் 1.25 மணி அளவில் பொது மக்களால் கண்டெடுக்கப்பட்டதாக சுபாங் ஜெயா காவல் துறை தலைவர், வான் அஸ்லான் வான் மாமாட் தெரிவித்தார்.
புதிதாகப் பிறந்த அந்தக் குழந்தை ஆரோக்கியமாக இருந்ததாகவும், சிகிச்சைக்காக அருகில் உள்ள கிளினிக்கிற்கு கொண்டு செல்லப்படதாகவும் வான் அஸ்லான் கூறினார்.
பின்னர், சுங்கை பூலோ மருத்துவமனைக்கு அந்தக் குழந்தை கொண்டு செல்லப்பட்டது.
அந்த ஆண் குழந்தை கண்டெடுக்கப்பட்ட இடத்த்தில் சிசிடிவி காணொலி எதுவும் இல்லை எனவும், குற்றவியல் சட்டம் 317இன்படி இந்த விவகாரம் விசாரிக்கப்படுகிறதாகவும் கூறினார்.







