ஜோகூர் பாரு, ஜூலை.27-
"ஜோகூர் மக்களைப் புறக்கணித்து, சிங்கப்பூர் கார்களுக்கு மட்டுமே சேவை செய்யும் கார் கழுவும் மையங்களின் உரிமங்கள் இரத்து செய்யப்படும்!" என மாநில வீட்டு வசதி, ஊராட்சித் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ முகமட் ஜாஃப்னி முகமட் ஷுகோர் அதிரடியாக எச்சரித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் தீவிரமாகப் பரவிய இந்த விவகாரத்தை மிகக் கடுமையானதாக எடுத்துக் கொண்ட அவர், உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை அளிக்காத வணிகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இலாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு வெளிநாட்டவர்களுக்கு மட்டும் சேவை வழங்கும் வணிகங்கள், தங்களது சமூகப் பொறுப்பையும் கருத்தில் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.








