Jul 1, 2026
Thisaigal NewsYouTube
மலாக்கா மாநிலத் தேர்தலில் 16 தொகுதிகளில் போட்டியிட பாஸ் திட்டம் / 2021 தேர்தலுடன் ஒப்பிடுகையில் தொகுதிகள் இருமடங்காக அதிகரிப்பு
தற்போதைய செய்திகள்

மலாக்கா மாநிலத் தேர்தலில் 16 தொகுதிகளில் போட்டியிட பாஸ் திட்டம் / 2021 தேர்தலுடன் ஒப்பிடுகையில் தொகுதிகள் இருமடங்காக அதிகரிப்பு

Share:

இவ்வாண்டு நடைபெறவுள்ள மலாக்கா மாநிலத் தேர்தலில், பாஸ் கட்சியானது மொத்தமுள்ள 28 தொகுதிகளில், 16 தொகுதிகளில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

பாஸ் போட்டியிட விரும்பும் தொகுதிகள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 15 தொகுதிகள் தற்போது பாரிசான் நேஷனல் வசத்தில் உள்ளதாகவும் மலாக்கா பாஸ் தலைவர் ஜுல்கிப்லி இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

பாண்டாய் குண்டோர், பாயா ரும்புட், கிளேபாங், தஞ்சோங் பிடாரா, ஆயர் லிமாவ், லிங்கி, தாபோ நானிங், ரெம்பியா மற்றும் டுரியான் துங்கல் உள்ளிட்ட மொத்தம் 16 தொகுதிகளில் பாஸ் போட்டியிடவுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலத் தேர்தலில், பாஸ் குறிவைத்துள்ள இந்த தொகுதிகளில் பெரும்பாலான தொகுதிகளை அம்னோ வென்றது.

அவற்றில் கிளேபாங் தொகுதியை மட்டும் மசீச கைப்பற்றியது.

அதேவேளையில், ரெம்பியா தொகுதியில் அம்னோ வென்றிருந்தாலும் கூட, அதன் சட்டமன்ற உறுப்பினர் ஜைலானி காமிஸ் பின்னர் கட்சி தாவல் தடுப்பு சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பாக, பாஸ் கட்சியில் இணைந்தார்.

பாஸ் கட்சியின் இம்முடிவானது, அண்மையில் மலாக்கா பாஸ் தேர்தல் இயந்திரத் தொடக்க நிகழ்வில் பாஸ் கட்சியின் தேர்தல் இயக்குநர் சனுசி நோர் வெளியிட்ட அறிவிப்புடன் ஒத்துப்போவதாகவும் ஜுல்கிப்லி இஸ்மாயில் குறிப்பிட்டுள்ளார்.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை