போர்ட்டிக்சன், செப்டம்பர்.09-
கடந்த வாரம், போர்ட்டிக்சன், தஞ்சோங் ஆகாஸ், சுங்கை லிங்கி மேம்பாலத்தில் கார் ஒன்று ஆற்றில் விழுந்து உயிரிழந்த எட்டு மற்றும் ஒன்பது வயதுடைய சிறார்கள், இஸ்லாமியர்களே என்று உறுதிச் செய்யப்பட்டது.
ஷரியா உயர் நீதிமன்றம் இதனை உறுதிச் செய்துள்ளதாக நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அல்ஸஃப்னி அஹ்மாட் தெரிவித்தார்.
அண்ணனும், தங்கையுமான அந்த இரண்டு சிறார்களுடன் காரில் இருந்த அவர்களின் தந்தையும், ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள வேளையில் அந்த சிறார்களின் மதத்தைக் கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில் அவர்கள் இஸ்லாமியர்கள் என்று உறுதிச் செய்யப்பட்ட நிலையில் இஸ்லாமிய முறைப்படி அவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்படும் என்று டத்தோ அல்ஸஃப்னி குறிப்பிட்டார்.








