Sep 1, 2026
Thisaigal NewsYouTube
தவறான கணக்குக்கு சென்ற ரிங்கிட் 11.6 லட்சம்: வங்கி இழப்பீடு வழங்க உத்தரவு
தற்போதைய செய்திகள்

தவறான கணக்குக்கு சென்ற ரிங்கிட் 11.6 லட்சம்: வங்கி இழப்பீடு வழங்க உத்தரவு

Share:

இணைய வங்கி பரிவர்த்தனையில் கணக்கு எண் மற்றும் பெறுநரின் பெயர் பொருந்தாததை கண்டறியத் தவறியதால், மோட்டார் உதிரிப்பாக நிறுவனம் இழந்த ரிங்கிட் 11.6 லட்சத்தை வங்கியும் அதன் துணை நிறுவனமும் வழங்க வேண்டும் என்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அலையன்ஸ் வங்கி மற்றும் அலையன்ஸ் இஸ்லாமிக் வங்கிக்கு எதிராக யாட் ஃபாட் ஆட்டோ சப்ளைஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியது. மேலும், ரிங்கிட் 50,000 வழக்குச் செலவையும் வழங்க உத்தரவிடப்பட்டது.

ரிங்கிட் 12.3 லட்சம் பெரோடுவா சேல்ஸ் நிறுவனத்துக்கு அனுப்பப்பட வேண்டிய நிலையில், கணக்கு எண் தவறாக உள்ளிடப்பட்டதால் வேறு நிறுவனத்துக்கு சென்றது. பின்னர் வெறும் ரிங்கிட் 69,303 மட்டுமே மீட்கப்பட்டது.

வங்கி அமைப்பில் பெயர்–கணக்கு எண் முரண்பாட்டை கண்டறியும் அடிப்படை பாதுகாப்பு இருந்திருந்தால் இந்த இழப்பைத் தவிர்த்திருக்கலாம் என நீதிமன்றம் தெரிவித்தது.

Related News