May 21, 2026
Thisaigal NewsYouTube
பிடிபட்ட நபர், அரசியல் தொடர்புடைய நபர் அல்ல
தற்போதைய செய்திகள்

பிடிபட்ட நபர், அரசியல் தொடர்புடைய நபர் அல்ல

Share:

புருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினரும், பேரா மாநில டிஏபி தலைவருமான Datuk Ngeh Koo Ham வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு நடத்தியதாக சந்தேகத்தின் பேரில் பிடிபட்டுள்ள நபர், அரசியல் கட்சி உறுப்பினர் அல்ல என்று பேரா மாநில போலீஸ் தலைவர் Datuk Seri Mohd Yusri Hassan Basri தெரிவித்தார்.

30 வயது மதிக்கத்தக்க அந்த நபர், பேரா மாநிலத்தில் எந்தவொரு அரசியல் கட்சியையும் பிரதிநிதிக்கவில்லை. அதேவேளையில் அந்த நபர் பேரா, Manjung- கை சேர்ந்தவர் அல்ல. அவர் மஞ்சோங்கிற்கு வெளியே உள்ள நபர் ஆவார் என்று Mohd Yusri Hassan குறிப்பிட்டார்.

கடந்த புதன்கிழமை அதிகாலையில் பேரா, Manjung அருகில் AIR Tawar- ரில் உள்ள Ngeh Koo Ham வீட்டில் நிகழ்ந்த இந்த பெட்ரோல் குண்டு வீச்சுத் தாக்குதலுக்கு பின்னணியில் உள்ள காரணங்கள் தொடர்ந்து ஆராயப்பட்டு வருவதாக Mohd Yusri Hassan தெரிவித்தார்.

Related News