Oct 17, 2026
Thisaigal NewsYouTube

சொஸ்மா சட்டத்தின் கீழ் 11 பேர் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சொஸ்மா சட்டத்தின் கீழ் 11 பேர் கைது

நவ. 27-

2012 ஆம் ஆண்டு சிறப்பு நடவடிக்கைகளுக்கான பாதுகாப்பு சட்டமான சொஸ்மாவின் 11 ஆடவர்களை பினாங்கு போலீசார் கைது செய்துள்ளனர்.

அதிகரித்து வரும் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் அந்த 11 ஆடவர்களும் சொஸ்மாவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பினாங்கு மாநில போலீஸ் துணைத் தலைவர் டத்தோ முகமட் அல்வி ஸைனால் தெரிவித்தார்.

பினாங்கு மாநிலம் முழுவதும் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் தொடங்கப்பட்ட Op Cantas Mutiara எனும் சோதனை நடவடிக்கையின் மூலம் இந்த 11 பேரும் வளைத்துப் பிடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் உளவுத்தகவல் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள இந்த 11 ஆடவர்களும் 28 நாட்களுக்கு தடுத்து வைக்கப்படுவர் என்று டத்தோ முகமட் அல்வி தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →